LatestPoetry & Writingதமிழ்

மலரும் 2026

– தமிழில் கவிதை – கிருபா கணேஷ் எழுதியது

ஆண்டின் முடிவு
அள்ளி தெளித்தது அனுபவங்களை

கடந்த ஆண்டின்
பிரதிபலிப்புகளை

அசை போட்டு
புது ஆண்டில் நுழையும் தருணம்

மனித உள்ளங்களை
ஒன்றே இணைக்கும் நேரம்

வாழ்த்துக்கள் பரிமாற்றங்கள்
மலர்ச்சியுடன், புத்துணர்ச்சியுடன்

உள்ளங்களின் நலம் பேணி
நல்லதை எண்ணி

வெற்றியை தொட
வாழ்வை அர்த்தமுள்ளதாக்க

புதுப் பயணங்களை தொடர
புது இலக்குகளை அமைக்க

ஆங்கில புத்தாண்டை
வரவேற்று

பயணிப்போம்
உற்சாகமுடன்

வளர்வோம்
சாதனைகள் புரிந்து

பெருமை சேர்ப்போம்
மனித நேயத்தை நிலை நிறுத்தி

அனுவபவங்களை
மனதில் ஏற்றி

பிரதிபலிப்புகளை
மையமாக்கி

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
கிருபா கணேஷ்

கவிஞர் அறிமுகம்  
மாநில நிதி கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கிருபா கணேஷ். எழுத்து, புகைப்படம் மற்றும் படைப்பாற்றல் கலைகளில் ஆழ்ந்த அன்பு கொண்ட இவர், சிந்தனையில் இளமையாகவும், மனப்பாங்கில் நேர்மறையாகவும் இருந்து, தன் படைப்புகள் மூலம் பிறரை ஊக்குவித்து வருகிறார்.

Read this beautiful poem in English translation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Developed By SanccyWebs